Central Processing Unit - Grade 07 | Unit 1
கணினி ஒழுங்கமைப்பு
அலகு 01
01. மையமுறைவழி அலகு என்றால் என்ன?
- மைய முறைவழி அலகு என்பது வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கேற்ப தொழிற்பட்டுத் தரவுகளை முறைவழிப்படுத்தும் இலக்கமுறைச் சுற்றாகும்.
02. மையமுறைவழி அலகின் பிரதான தொழிற்பாடு யாது?
- கணனிச் செய்நிரல்(Pசழபசயஅ) தேக்கி வைக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துதலே இதன் பிரதான தொழிற்பாடாகும்.
03. மையமுறைவழி அலகினை எங்கு அவதானிக்க முடியும் அல்லது பொருத்தப்பட்டிருக்கும்?
- முறைமை அலகிலுள்ள தாய்ப்பலகையில்
04. மையமுறைவழி அலகு எத்தனை பகுதிகளைக் கொண்டுள்ளது? அவை எவை?
- மூன்று
- எண்கணித, தருக்க அலகு (ALU)
- கட்டுப்பாட்டு அலகு (CU)
- நினைவகப் பதிவகங்கள் (MR)
05. மையமுறைவழி அலகினை வரைபடம் மூலம் விபரிக்குக?
06. மத்திய செயற்பாட்டலகினை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் 03 தருக?
- AMD
- INTEL
- APPLE
07. Intel, AMD ஆகிய இரு நிறுவனங்களின் நுண்செயலிக்கு உதாரணங்கள் தருக?
- Intel – Celeron, Pentium, core
- AMD – Sempron, Athlon, phenom
08. எண்கணித, தருக்க அலகு அலகு என்றால் என்ன?
- கணித மற்றும் தருக்கச் செயற்பாடுகளை மேற்க்கொள்ளும் பகுதியினை எண்கணித தருக்க அலகு எனப்படும்.
09. எண்கணித, தருக்க அலகின் இரு முக்கிய பகுதிகளும் எவை?
- கூட்டல், கழித்தல், பெருக்கல், பிரித்தல் போன்ற கணித செய்கைகளைச் செய்தல்
(உ+ம்):- 2 + 2 = 43 – 1 = 25 × 2 = 1010 / 2 = 5
- இரு எண்களை ஒப்பிடுதல் போன்ற தருக்கச் செயல்களைச் செய்தல்
(உ+ம்):- 2 = 23 > 15 < 8
10. கட்டுப்பாட்டு அலகு என்றால் என்ன?
- கட்டுப்பாட்டு அலகு என்பது கணனியுடன் இணைக்கப்பட்டுள்ள வன்பொருள்களுக்கிடையே தொடர்பாடல், செய்பணி, கட்டுப்படுத்தல் ஆகிய செயற்பாடுகளினை மேற்க்கொள்ளும் அலகே கட்டுப்பாட்டு அலகு எனப்படும்.
11. கட்டுப்பாட்டு அலகின் பணிகள் யாவை?
- உள்ளீடு, வெளியீடு ஆகியவற்றின் தரவுக் கட்டுப்பாடு.
- தரவுகள் எந்த இடத்திற்கும் சரியான நேரத்திற்கும் அனுப்பப்படுவதை உறுதிப்படுத்தல்.
- கணனிக்கு அனுப்பப்படும் செய்திகளை சரிபார்த்தல்.
12. நினைவகப் பதிவகம் என்றால் என்ன?
- மையமுறைவழி அலகு பயன்படுத்தப்படும் தரவுகளையும் அறிவுறுத்தல்களையும் தற்காலிகமாக சேமித்து வைத்துக் கொள்ளும் இடம் ஆகும்.
13. கணனி தலைமுறையினை சுருக்கமாக விளக்குக?
- முதலாம் தலைமுறைக் கணனி:-
- முதலாம் தலைமுறைக் கணனி 1940 – 1956 ஆண்டு காலப்பகுதியினைக் கொண்டது ஆகும்.
- செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு வெற்றிடக் குழாய்கள் தொழிநுட்பம் பயன்படுத்தப்பட்டன.
- வெற்றிடக்குழாய் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தப்பட்டதனால் அதிக வெப்பம் ஏற்பட்டது. இதனை தனிப்பதற்கு ஒரு முறைமை தேவைப்பட்டது. இதனால் அதிக மின் சக்தி தேவைப்பட்டது.
- இதன் அளவு மிகப் பெரியது ஆகும். அதாவது ஒரு பெரிய அறை தேவைப்பட்டது.
- இதன் வேகம்(கதி) மில்லி செக்கனில் அளவிடப்பட்டது.
- இதனை உற்பத்தி செய்வதற்கும், பராமரிப்பதற்கும் அதிக செலவு ஏற்பட்டது
- ENIAC , UNIVAC, EDVAC என்பவற்றை உதாரணமாக குறிப்பிட முடியும்.
- இரண்டாம் தலைமுறைக் கணனி:-
- இரண்டாம் தலைமுறைக் கணனி 1956 – 1963 ஆண்டு காலப்பகுதியினைக் கொண்டது ஆகும்.
- செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு திரான்சிஸ்ரர் தொழிநுட்பம் பயன்படுத்தப்பட்டன.
- முதலாம் தலைமுறையும் ஒப்பிடும் போது மின் சக்தி குறைவாக தேவைப்பட்டது.
- இந்த தலைமுறைக்கணனிகள் முதலாம் தலைமுறையுடன் ஒப்பிடும் போது அளவில் சிறியது ஆகும்.
- இதன் வேகம்(கதி) மைக்ரோசெக்கனில் அளவிடப்பட்டது.
- இதனை வாங்குவதற்கு அதிக செலவு ஏற்பட்டது.
- IBM 7030, CDC 1604 என்பவற்றை உதாரணமாக குறிப்பிட முடியும்.
- மூன்றாம் தலைமுறைக் கணனி:-
- மூன்றாம் தலைமுறைக் கணனி 1964 – 1971 ஆண்டு காலப்பகுதியினைக் கொண்டது ஆகும்.
- செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு ஒருங்கினைந்த சுற்றுக்களைக் கொண்ட தொழிநுட்பம் பயன்படுத்தப்பட்டன.
- இரண்டாம் தலைமுறையும் ஒப்பிடும் போது மின் சக்தி குறைவாக தேவைப்பட்டது.
- இந்த தலைமுறைக்கணனிகள் இரண்டாம் தலைமுறையுடன் ஒப்பிடும் போது அளவில் சிறியது ஆகும்.
- இதன் வேகம்(கதி) நனோசெக்கனில் அளவிடப்பட்டது.
- இரண்டாம் தலைமுறையுடன் ஒப்பிடும் போது செலவு குறைவாகும்.
- IBM 360, CDC 6600 என்பவற்றை உதாரணமாக குறிப்பிட முடியும்.
- நான்காம் தலைமுறைக் கணனி:-
- நான்காம் தலைமுறைக் கணனி 1971 – தற்காலம் வரையான காலப்பகுதியினைக் கொண்டது ஆகும்.
- செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு நுண்முறைவழியாக்கி கொண்ட தொழிநுட்பம் பயன்படுத்தப்பட்டன.
- மூன்றாம் தலைமுறையும் ஒப்பிடும் போது மின் சக்தி குறைவாக தேவைப்பட்டது.
- இந்த தலைமுறைக்கணனிகள் மூன்றாம் தலைமுறையுடன் ஒப்பிடும் போது அளவில் சிறியது ஆகும்.
- இதன் வேகம்(கதி) பிக்கோசெக்கனில் அளவிடப்பட்டது.
- மூன்றாம் தலைமுறையுடன் ஒப்பிடும் போது செலவு குறைவாகும்.
- IBM PC, STAR 1000, APPLE II, Apple Macintosh, Alter 8800 என்பவற்றை உதாரணமாக குறிப்பிட முடியும்.
14. ஒரு மில்லி, மைக்ரோ, நனோ, பிக்கோ செக்கன்களின் அளவுகளினைக் குறிப்பிடுக?
15. மையமுறைவழி அலகில் கடிகாரக் கதி என்பது யாது?
- ஒரு செக்கனில் நடைமுறைப்படுத்தப்படும் அறிவுறுத்தல்களின் எண்ணிக்கை ஆகும்.
16. மையமுறைவழி அலகினை அளப்பதற்கு பயன்படுத்தப்படும் அலகு யாது?
- ஹேட்ஸ் (Hz)
17. நவீன கணனியில் கதியினை அளப்பதற்கு பயன்படுத்தப்படும் அலகுகள் எவை?
- மெகாஹேட்ஸ்(MHz)
- கிகாஹேட்ஸ்(பGHz)
18. பின்வரும் சுருக்கக் குறியீடுகளுக்கு விரிவாக்கம் எழுதுக?
- CPU - Central Processing Unit
- ALU - Arithmetic & Logical Unit
- CU - Control Unit
- MR - Memory Registers
கருத்துகள் இல்லை